உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

46 பார்வைகள்

குருநாகல் – புத்தளம் வீதியின் பரமாகந்த சந்திக்கருகில் உள்ள தோனிகல, நவ கம்மன பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி, வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தை கடந்து முன்னோக்கிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது சாரதியின் அலட்சியப் போக்கு காரணமாக, எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

46 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

47 0 0
இலங்கை செய்திகள்

பசிலுக்கு மீண்டும் பிடியாணை.!

மாத்தறை காணி கொள்வனவு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மாத்தறை தலைமை நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை…

26 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைப்பு.!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

30 0 0