உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் இருந்து வாள்கள், கைக்குண்டுகள் மீட்பு.!

41 பார்வைகள்

கண்டி, நத்தரன்பொத்த பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் வாடகை வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மற்றும் வாள்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியால் கண்டியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில், குறித்த வீட்டில் சோதனை நடத்திய போது இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

வட மாகாண பொலிஸ் பிரிவு ஒன்றில் கடமையாற்றும் இந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதோடு கணவன் – மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் பொலிஸார், அந்த ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைக்காக பல்லேகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பல்லேகலை பொலிஸாரும், கண்டியின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20)…

46 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில்…

47 0 0
இலங்கை செய்திகள்

பசிலுக்கு மீண்டும் பிடியாணை.!

மாத்தறை காணி கொள்வனவு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மாத்தறை தலைமை நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை…

26 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைப்பு.!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

30 0 0