உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சீனா – இலங்கை கல்வி நட்புறவுச் சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
138 பார்வைகள்

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் புதிய தவிசாளராக, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச சார்பற்ற சர்வதேச அமைப்பான ‘சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்’ மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போதே இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், சம்மாந்துறை தேர்தல் தொகுதியூடாக தீவிர அரசியலில் பிரவேசித்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

அரசியல் பணிகளுக்குப் பின்னரும், தனது கல்விப் புலமைப்பின்னணியைக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சர்வதேசப் பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

22 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0