உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

மர்மமான முறையில் உயிரிழக்கும் முக்கிய சாட்சியாளர்கள்.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
85 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

குருநாகலில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கை வரலாற்றில் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இந்த மரணம் பெரும் சந்தேகத்துக்குரியது. சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழக்கின்றமை சமூகத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சி.டி. விக்கிரமரத்ன பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவருக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறான பின்னணியில், இந்த மரணத்தைத் தற்கொலை என்று முத்திரை குத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் முறையற்றதொரு செயற்பாடாகும். இந்த மரணம் குறித்து அரசு உரிய விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

28 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

26 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

30 0 0