உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
75 பார்வைகள்

சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருள் தொகையை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் “பசுமை வழி” (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற குறித்த பயணியை இன்று (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 23 வயதான மலேசிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு டுபாய்க்குச் சென்று அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் 03 சொக்லேட் டொபி போத்தல்களில் 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

28 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

26 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

30 0 0