உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
72 பார்வைகள்

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி. கஸ்தூரி ஆராய்ச்சி வழிகாட்டலிலும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸார் நெறிப்படுத்தலில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.ஆர்.எம். பிர்தௌஸ் வழங்கிய இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.பிரகலாதன் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

28 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

26 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

30 0 0