உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

செம்மணிப் புதைகுழியை பார்வையிட வருகின்றது ஐரோப்பிய தூதுவர் குழு.!

இலங்கை செய்திகள் 23 மணி நேரம் முன்
111 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது.

இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

28 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

26 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

30 0 0