உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ரயிலுடன் உந்துருளி மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
130 பார்வைகள்

நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிலாபத்தில் இருந்து அதிகாலை 7.15 மணியளவில் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட நீர்கொழும்பு கட்டுவ ரயில் நிலையத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் உந்துருளியில் வந்த நபர் ஒருவர் கவனக்குறைவாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரது அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

விபத்து குறித்து நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கணவரின் நண்பரால் தாக்கப்பட்டு மனைவி படுகொ@லை

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி போலீஸ் பிரிவுக்கு…

36 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

51 0 0
இலங்கை செய்திகள்

இராணிவத்தை – பம்பரகலை ஒடின்டன் வீதியில் வாகன விபத்து

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியில், பம்பரகலை ஒடின்டன் பகுதியில் இன்று(27) காலை வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நாகசேனை பகுதியிலிருந்து பயணித்த பொலிரோ லொறி ஒன்றும், இராணிவத்தை…

46 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும்…

48 0 0