உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

கதிர்காம பாதயாத்திரையில் திடீரென உயிரிழந்த யாத்திரிகர்.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
96 பார்வைகள்

கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரிகர் நேற்று திங்கட்கிழமை காலை திடீரென உயிரிழந்தார்.

இச்சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே.பாக்கியராஜா (வயது 52) என்பவரே இவ்விதம் உயிரிழந்த மூன்றாவது யாத்திரிகர் ஆவார்.

மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மைத்துனர் (தங்கையின் கணவர்) ஆவார்.

இவரது சடலம் தற்சமயம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது .

இவரை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன் பார்வையிட்டார்.

இதேவேளை பாதயாத்திரையின் போது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது யாத்திரிகர் காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் யாத்திரிகர் மரணம் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து இடம்பெற்று இருக்கின்றது. அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0