உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நாமல் மீது சேறு பூசும் சதி; சி.ஐ.டியில் பாய்ந்த மொட்டுவின் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
88 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் கூறியதாவது,
“மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி, அரசுக்குச் சார்பான தரப்புகளும், பிரிவினைவாதக் கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்பு குழுக்களும் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட தரப்பினரே, இன்று ராஜபக்ஷக்களுக்குச் சேறுபூச முயற்சிக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே பாதாள உலகக் குழுக்களும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதமும் இந்நாட்டில் முழுமையாக அடக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.

போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிப் பேசும் தற்போதைய அரசின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கியுள்ளனர். இது குறித்து அரசு பதில் கூற வேண்டும்.

முகநூல் போலிக் கணக்குகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல், தைரியமிருந்தால் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.” – என்று பசன் கஸ்தூரி மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0