உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
156 பார்வைகள்

தமிழகத்தில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள பொ.ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது.

பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு மேலும் புதிதாக ஒரு இலக்கிய ஆளுமையின் நேர்காணலை உள்ளடக்கி 20 நேர்காணல்களின் தொகுப்பாக யாழ்ப்பாணத்தில் ‘எங்கட புத்தகங்கள்’ என்ற பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

தற்போது வேர்முகங்கள் நூலை 3ஆவது வெளியீடாக சென்னையில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை (08.07.2026) அண்ணா நூற்றாண்டு நூலக நூல் வெளியீட்டுக் கட்டட அரங்கில் இடம்பெற்றுள்ளது.

பதிப்பாளர் வைகறைவாணனின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் இயக்குநரும் நடிகரும் படைப்பாளியுமான கவிதா பாரதி வெளியிட்டு வைக்க, ஓவியர் டிராட்ஸ்கி மருது முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூல் தொடர்பான கருத்துகளை காமராஜர் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. சுப்பிரமணியன், படைப்பாளியும் ஊடகவியலாளருமான ந. சுந்தரபுத்தன், வரலாற்று ஆய்வாளர் பழ. அதியமான் ஆகியோர் ஆற்றியிருந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியின் நூலாசிரியரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் ஏற்புரையை நிகழ்த்தியிருந்தார்.

இத் தொகுப்பில் கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி நா.சுப்பிரமணியன், பாரதிராஜா, சுஜாதா, டிராட்ஸ்கி மருது, சா. கந்தசாமி, மணவை முஸ்தபா, செங்கை அழியான், தி. சு.சதாசிவம். த. ஜெயகாந்தன், அறிவுமதி, டி திலீப்குமார், சு.வில்வரத்தினம், பாரதிபுத்திரன், புதுவை இரத்தினதுரை, கலாநிதி பரமு. புஸ்பரட்ணம், இ. பத்மநாபஐயர், ஞானரதன், இன்குலாப், கி.பி.அரவிந்தன் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இருபது கலை இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக பேச்சுப் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் இரண்டாமிடம்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஜெரோம் ஜொய்சன் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.…

97 0 0
இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் உப்பளத் திட்டத்தை கைவிடுங்கள்.!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட உப்பளத் திட்டத்தினை கைவிடுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இது…

88 0 0
இலங்கை செய்திகள்

வேகமாகப் பரவும் மர்மத் தாவரம்; கட்டுப்படுத்துவது அவசியம் என எச்சரிக்கை.!

நயினாதீவில் ஆலங்குளத்தை அண்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வேகமாகப் பரவி வரும் இனங்காணப்படாத தாவரம், மண்வளத்தை மேம்படுத்தும் நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கட்டுப்பாடின்றிப் பரவினால் விவசாய நிலங்களையும்…

90 0 0
இலங்கை செய்திகள்

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொ**ல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்.!

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. கொக்குவில் இந்துக்…

88 0 0