உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
136 பார்வைகள்

பேராதனை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (12) பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பேராதனை நகருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்து சோதனை நடத்திய போது பேராதனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 400 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 150 கிராம் ஹெரோயின் ஆகியவற்றுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, கரையோர பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் ஹின்னியப்புஹாமி மாவத்தையில் நடத்திய விசேட சோதனையின் போது கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 119 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பேராதனை மற்றும் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

99 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து

பொரளை, வார்ட் பிளேஸில் (Ward Place) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

128 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

118 0 0