உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை சபையில் நிச்சயம் தோற்கடிக்கப்படும்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
40 பார்வைகள்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுக்கின்றன. இது முற்றிலும் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாகும்.

இதற்கு முன்னரும் எதிர்க்கட்சிகள் இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வந்தபோதும், விவாதங்களின் போது அவர்களால் தர்க்க ரீதியான கருத்துகளை முன்வைக்க முடியவில்லை. அந்த வரிசையில், இந்தப் பிரேரணையும் தோல்வியிலேயே முடியும்.” – என்றார்.

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணி மற்றும் அது தொடர்பான காரணங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

39 0 0
இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

“பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

38 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

70 0 0