உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

நெருங்கி வரும் எல்நினி காலநிலையால் வறட்சி ஏற்படும் அபாயம்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
46 பார்வைகள்

இந்து சமுத்திரத்தை நெருங்குகிறது எல்நினோ : நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா!

மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை யாழ். கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்சியையும் ஏற்படுத்தும்.

இருந்தாலும் இந்த தாளமுக்கங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப் பகுதியில் அதிக வரட்சியே நிலாவும்.

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ். மாவட்ட கடற்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

62 0 0
இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்! – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் ‘கூட்டுச் சாம்பார்’ போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

67 0 0
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹக்கீம் மற்றும் ரிஷாட் முஸ்லிம் சமூகத்தின் அதிகாரங்களைத் தமிழ் கட்சிகளிடம் அடகு வைக்கின்றனர்!

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக்…

46 0 0