உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி ஒன்று சுவீகரிக்கப்பட இருந்த நிலையில் காணி உரிமையாளர், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பினால் அந்நடவடிக்கை என்று இடைநிறுத்தப்பட்டுள்ளது

இன்று காலை காணி அளவீடு செய்வதற்காக காணி உரிமையாளர் மற்றும் அயல் காணி உரிமையாளர்களை சமூக மளிக்குமாறு பிரதே செயலகம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் காணி உரிமையாளர், அயல் காணி உரிமையாளர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

அங்கே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், பருத்தித் துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், மருதங்கேணி வட்டார பிரதேச உறுப்பினர் கிட்டு, நாகர்கோவில் வட்டரா உறுப்பினர் குறிஞ்சி, ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், மருதங்கேணி வடக்கு, தெற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், என அனைவரும் இணைந்திருந்தனர்.

அவர்கள் இராணுவ தேவைக்காக அக்கானியை இராணுவத்துக்கு விற்க வேண்டாம் என காணி உரிமையாளரை வலியுறுத்தினர்.

இந்நிலையில் காணி உரிமையாளர் நீண்ட நேரமாக காணியை இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான முயற்சியிலிருந்தார்.

ஆனாலும் இறுதி நேரத்தில் தனது 30 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இருக்கின்ற போதும், 20 ஏக்கர் காணியை மட்டும் அடையாளப்படுத்தி சுவீகரிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ளாத காணி உரிமையாளர் காணி அளவீடு செய்ய முடியாதென்று நில அளவைத் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தார்.

இந்நிலையில் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து காணி உரிமையாளர், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள் குறித்த 10 வது விஜயபாகு படைப்பிரிவு வளாகத்தில் காணியை பார்வையிட சென்றபோது ஏற்கனவே இராணுவ தேவைக்காக குறித்த காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இராணுவத்திற்கு உரிமையான காணிக்குள் யாரும் செல்ல முடியாது என்று காணி உரிமையாளர், மற்றும் அதிகாரிகளை இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேவேளை குறித்த காணியானது உரிமையாளரின் அனுமதியின்றி உரிமையாளர் வெளிநாட்டிலிருந்த போது 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அளவீடு செய்யப்பட்ட நிலையிலேயே இன்று இறுதிப் படுத்துவதற்காக நில அளவை திணைக்களம் பிரதேச செயலகத்தினுடைய விடுத்த கோரிக்கைக்கு அமைவாக காணியை அளவீடு செய்வதற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0