உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சமூக விஞ்ஞானப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
43 பார்வைகள்

​அக்கரைப்பற்று வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளில் பங்கேற்று, மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவாகிய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (06) பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.

இங்கு, தரம் 10 மாணவி ஏ. எப்.இஸ்ரா முதலாம் இடம் பெற்றார். தரம் 11 மாணவர்களான ஏ.எப். இஹாதா இரண்டாம் இடத்தையும், எம்.ஐ.ஆதில் மூன்றாம் இடத்தையும் பெற்றார்கள்.

அதுபோல், தரம் 09 மாணவன் எம்.ஏ.யூசுப் மிக்தாம் மூன்றாம் இடத்தையும், தரம் 06 மாணவன் எம்.ஏ.அமார் மூன்றாம் இடத்தையும் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இங்கு இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் வலயத்தலைவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தனர்.

​மாணவர்களைப் போட்டிகளுக்காக அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து, பாடசாலை மட்டத்தில் போட்டிகளை மிகச் சிறப்பாக நடாத்தி, மாணவர்களை வலய மட்டத்திற்கு அழைத்துச் சென்று வழிப்படுத்திய சமூக விஞ்ஞானப் பாட இணைப்பாளர் ஆசிரியர் எம்.எஸ்.எம்.அன்வர் மற்றும் ஏனைய சமூக விஞ்ஞானப் பாட ஆசிரியர்களான, எம்.ஏ.எம்.றிஷாட், எஸ்.அஷ்ரப்கான், ஏ.ஏ.பர்ஸானா, பி.ஏ.மஹ்ஜபீன், ஏ.வி.செரீன்தாஜ், ஐ.முனோபரா, எம்.கே.றிஸ்னா ஆகியோருக்கும் இவர்களுடன் இணைந்து மாணவர்களின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்து ஊக்கமளித்த அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார், பிரதி அதிபர்களான எம்.ஏ. கமறுந்நிஸா, ஜே.வஹாப்தீன், உதவி அதிபர் எம்.ஐ.பளீலுள்ளா மற்றும் வலயத் தலைவர்களான எம்.சி.எம்.நஸிறுதீன், எம்.எப்.பாசினா, ஏ.ஆர்.எம்.நிஹால், உதவி வலய தலைவர்களான எம்.ஜே.எம்.ஜரீத், ரி.எம்.நெளஸாத் அலி எம்.எல்.எஸ்.முஜீபா என அனைவருக்கும் பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

44 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0