உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காரைதீவு, நிந்தவூர் மற்றும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்புகளில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவிலான மீன்கள் பிடிக்கப்பட்ட போதிலும், அவற்றின் விலைகள் குறைக்கப்படாமல் அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.

அடிக்கடி ஏற்படும் அசாதாரண காலநிலை காரணமாகத் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சில மீனவர்கள் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாகக் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை, கல்முனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை போன்ற பகுதிகளில் இத்தகைய தன்னிச்சையான விலை உயர்வுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

எனவே, நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இப்பகுதிகளில் மாரிகாலப் பருவமழை இன்மையினால் ஆறு மற்றும் குளங்களில் நன்னீர் மீன்களின் பிடிபாடு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் காரணமாக, சந்தைகளில் கருவாடு வகைகளின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களின் பிரதான சந்தைகளில் மீன் வரத்து குறைவடைந்துள்ளது.

பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு மீன் வரத்து குறைந்துள்ளதன் காரணமாகச் சில்லறைச் சந்தைகளிலும் மீன்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

51 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

47 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0