உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

அனுராதபுரம் மாவட்டம், கெக்கிராவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெக்கிராவ – யக்கல்ல வீதியில் இந்தச் சோகமான விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கெக்கிராவ – யக்கல்ல வீதியில் யக்கல்ல நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பாதசாரியும் உடனடியாக மீட்கப்பட்டுத் தம்புள்ளை பொது வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதசாரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0