உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம், ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும், அவரே விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

உயிரிழந்த மீனவரும் மற்றொரு மீனவரும் நேற்று வியாழக்கிழமை மாலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவர்கள் மீண்டும் கரை திரும்பிக் கொண்டிருந்த போதே, கடல் அலையின் சீற்றம் காரணமாக இவர்களது படகு திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, படகில் இருந்த இரண்டாவது மீனவர் அந்தப் பகுதியால் பயணித்த மற்றொரு மீன்பிடிப் படகின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும், கடலில் மூழ்கிய படகின் உரிமையாளரான மீனவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாரவில கடற்பரப்புக்கு அருகில் வைத்து மற்றுமொரு மீன்பிடிப் படகினரால் அவரது சடலம் மீட்கப்பட்டு, சிலாபம் களப்புப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகச் சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

39 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0