உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் அர்ச்சுனாவின் உருவப் பதாகைக்கு செருப்பு மாலை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, அந்தப் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறிது நேரத்தில் அர்ச்சுனா அந்த பதாகையை தானே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரிகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

54 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0