உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டெங்கு அபாயம் நாட்டில் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இலங்கையில் இவ்வருடம் இதுவரை இனங்காணப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்து 144 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நடப்பு ஜூன் மாதத்தின் கடந்த 13ஆம் திகதி வரையிலான குறுகிய நாட்களுக்குள் மட்டும் சுமார் 7 ஆயிரத்து 302 டெங்கு நோயாளர்கள் புதிதாகப் பதிவாகியுள்ளனர்.

தற்போது ஆரம்பித்துள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் சடுதியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

டெங்கு பரவலின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் 89 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ‘அதி உயர் டெங்கு அபாயம் மிக்க வலயங்களாகவும்’, 1,185 பிரிவுகள் சராசரி பாதிப்பைக் கொண்டுள்ள பகுதிகளாகவும் சுகாதாரத் துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை பதிவாகியுள்ள 24 மரணங்களின் அடிப்படையில், டெங்கு மரணங்களின் வீதம் 0.06 சதவீதமாக உயர்வடைந்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்நிலைமை மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக,

  • கொழும்பு – 8,686 நோயாளர்கள்
  • கம்பஹா – 7,263 நோயாளர்கள்
  • மாத்தறை – 2,986 நோயாளர்கள்
  • இரத்தினபுரி – 2,874 நோயாளர்கள்
  • களுத்துறை – 2,718 நோயாளர்கள்
  • காலி – 2,519 நோயாளர்கள்
  • கண்டி – 2,202 நோயாளர்கள்

மேற்படி மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் இந்த டெங்கு ஆபத்து நிலைமையைக் கருத்திற்கொண்டு, தாங்கள் வாழும் வீடு மற்றும் வேலைத்தளச் சூழலில் டெங்கு பரப்பக்கூடிய நுளம்புப் பெருக்க இடங்களை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை முழுமையாக இல்லாதொழித்துச் சூழலைத் தூய்மையாகப் பேணுமாறு சுகாதார அமைச்சு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0