உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுரேஷ் சலேவை விசாரியுங்கள் ஆனால் பழிவாங்க வேண்டாம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், எனினும் விசாரணை என்ற பெயரில் எவரையும் பழிவாங்கவோ அல்லது கொலை செய்யவோ கூடாது என்றும் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், “பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித குலத்திற்கு எதிரானது, அதனை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும்” எனக் கடந்த காலங்களில் கூறிவந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று அதே சட்டத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றது என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தாக்குதல் நடந்து 7 நாட்கள் கடந்தும் அப்போதைய அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. நாட்டில் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் 24 மணித்தியாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.

அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்காததால், நீதி அமைச்சராக இருந்த நான் முறைப்பாடளிக்குமாறு எழுத்துமூலமாக அறிவுறுத்தினேன். அதன் பின்னரே, கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு ‘நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் முறைப்பாடளிக்கின்றோம்’ எனப் பொலிஸார் அறிவித்தனர்.

எமது ஆட்சிக்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்டு 80 குற்றவாளிகளை அடையாளப்படுத்தி, 41 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தோம்.

இவ்வாறான நிலையில், அப்போதைய சட்டமா அதிபர் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருநாளுக்கு முன்னரே, ‘குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி உள்ளார்’ என அறிக்கை விட்டார். இது குறித்து அவரிடம் வாக்குமூலம் பெற முற்பட்ட போது, அவர் நீதிமன்றத்தை நாடி அதற்குத் தடை உத்தரவு பெற்றார்.

இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நான் வினவிய போது, ‘குறித்த சட்டமா அதிபர் தனது சேவை காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்குமாறு கோரினார், அதற்கு நான் இணங்கவில்லை என்பதால்தான் பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு குறிப்பிடுகிறார்’ என என்னிடம் தெளிவாகக் கூறினார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கைது செய்வதாகவும், உண்மையை வெளிப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் பிரதான சூத்திரதாரியை பகிரங்கமாக அறிவிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்றுவரை எந்த உண்மையும் வெளிப்படுத்தப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய சட்டமூலத்தை நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தை நாடினர்.

யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் எதற்கு என்று மேடைகளில் முழங்கியவர்கள், இன்று அதே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றார்கள்.

கடந்த 75 ஆண்டுகால வரலாற்றைச் சாபம் என்று விமர்சிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த காலங்களை வசைபாடுவதை விடுத்து நாட்டுக்காக என்ன செய்யப்போகின்றார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0