உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வசாவிளானில் இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணியொன்றில், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 2026.06.09ஆம் திகதியிடப்பட்டு, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதிக்கு முகவரியிடப்பட்ட இக்கடிதத்தின் உத்தியோகபூர்வ பிரதி சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்திச் சட்டத்தின் பிரிவு 23(5)இன் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரால், அச்சட்டத்தின் 28A(1)ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட வேண்டிய இறுதி சட்டபூர்வ அறிவித்தலாகவே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின்படி, எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்பாக இராணுவ வைத்தியசாலை கட்டுமானப் பணிகளை நிறுத்தி, காணியை விடுவிப்பதற்கு இராணுவத் தரப்பு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், பிரதேச சபைக்குரிய சட்ட அதிகாரங்களின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1982ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான நகர அபிவிருத்திச் சட்ட விதிமுறைகளின் கீழ், கட்டுமானத்துக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் தவிசாளர் சோ. சுகிர்தன் விடுத்துள்ள அறிவித்தல் கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0