உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இப்பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சூறாவளியினால் கொட்டகலை, கிரேட்வெஸ்டன், நானுஓயா, பெராக்கும்புர மற்றும் அம்பேவெல புகையிரத நிலையங்களுக்கு அருகில் 5 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதில் கொட்டகலை – தலவாக்கலை (112.5 மைல்கல் அருகில்) சுமார் 50 மீற்றர் நீளமான பகுதி மற்றும் நானுஓயா – அம்பேவெல இடையிலான பகுதிகளின் புனரமைப்புப் பணிகள் தனியார் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகள் அனைத்தும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்புச் சுவர்களை அமைப்பதற்காகக் கற்களைக் கொண்டு செல்ல புகையிரத திணைக்களத்தின் புகையிரத சேவை (Service Train) மற்றும் அதன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மலைநாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து நலன் கருதி, புகையிரதப் பாதையை விரைவாகச் சீரமைக்கும் நோக்கில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

41 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0