உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
16 பார்வைகள்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதிலோ அல்லது அவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதிலோ எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த விசாரணைகள் அனைத்தும் பழிவாங்கல் நோக்கின்றி, முற்றிலும் நீதியான முறையில் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

முறையான மற்றும் நீதியான விசாரணைகளின் ஊடாக சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தால்கூட அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அதற்கு எமது முழுமையான ஆதரவு உண்டு.

இருப்பினும், நாட்டின் சட்டதிட்டங்களின்படி சந்தேகநபர் ஒருவரை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதற்கான தெளிவான விதிமுறைகள் உள்ளன. அந்தச் சட்ட நடைமுறைகளையும் மனித உரிமைகளையும் மீறி எதேச்சதிகாரமாகச் செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அத்தகைய சட்ட அத்துமீறல்களையே நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.

எனவே, சலேவின் விவகாரத்தில் அரசு சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படாது, நீதியான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

41 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0