நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் உயிரிழப்பு.!
அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்துருகிரிய – கொடகம வீதியின் பனாகொட பகுதியில் பாதையைக் கடக்க முயன்ற நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (13) இடம்பெற்றது.
உயிரிழந்தவர் பனாகொட பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காயமடைந்த ஓட்டுநர், சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.