உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்த நபருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
77 பார்வைகள்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் நடமாடும் வியாபார நிலையங்கள் என்பன அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, கடந்த வாரம் சங்கானை, சுழிபுரம் மற்றும் அராலி ஆகிய பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மூன்று பாண் விற்பனை வாகனங்கள், ஒரு ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் மற்றும் சில உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 10 வர்த்தகத் தரப்பினருக்கு எதிராகச் சங்கானை சுகாதாரப் பிரிவினரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகள் அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 9 தரப்பினருக்கு மொத்தம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அதேவேளை, சுழிபுரம் பகுதியில் அசுத்தமான முறையில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 23 ஆயிரம் ரூபா பண அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

100 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உ**யிரிழந்த சம்பவம்; அமைச்சர் சந்திரசேகர் உடனடி தலையீடு.!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக…

108 0 0
இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை…

101 0 0
இலங்கை செய்திகள்

மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த சந்தேகநபரை நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.…

105 0 0