உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பருத்தித்துறையில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்


யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்லிபுரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீரெனக் காணாமல்போயுள்ளார்.

இது குறித்துக் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸார் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட தொடர் தேடுதல்களின் போது, சிறுவனின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் இருந்து அந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என்று அந்தப் பகுதி மக்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோகமான சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

61 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0