உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கலைஞர்கள் சங்கமம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கலாமன்றங்களின் கலைஞர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு, இன்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில், வருகை தந்திருந்த விருந்தினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் பன்னீர் தெளித்து மங்களகரமாக வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, வருகை தந்திருந்த முக்கிய விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், கலந்து கொண்ட கலைஞர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தற்காலத்தில் கலைத் துறை சந்திக்கும் சவால்கள், எதிர்கால வளர்ச்சி மற்றும் தங்களின் தேவைகள் குறித்த பல்வேறுபட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, கலைஞர்களினால் தத்தமது கலைத்துறை சார்ந்த வாழ்வாதார மற்றும் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான கலை ஆற்றுகைகளும் (நிகழ்த்துகைகளும்) மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பாரம்பரியக் கூத்துக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், நவீன நாடக மற்றும் இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப் பல்துறை சார்ந்த கலைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பிராந்திய ரீதியாகக் கலைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், கலைகளின் ஊடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

61 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0