உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சஜித்துடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு ரணிலிடம் ஒப்படைப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
112 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தரப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் பேச்சுகள் மற்றும் எதிர்காலக் கூட்டு நடவடிக்கைகள் குறித்த நேரடிப் பொறுப்பை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதேவேளை, சஜித் தரப்புடன் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொள்ள வேண்டிய ஏனைய வேலைத்திட்டங்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியுடன் நடத்தப்பட வேண்டிய பேச்சுகளுக்கான பொறுப்புகள், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியேகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், மறுசீரமைப்புகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை எவ்வாறு எழுச்சியுடன் நடத்துவது என்பது குறித்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரிவாகப் பேசினார்.

குறிப்பாக, சஜித் பிரேமதாஸ தரப்புடனும் ஏனைய கூட்டு எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து எவ்வாறு அரசியல் ரீதியாக முன்னோக்கிச் செல்வது என்பது பற்றி இதன்போது முக்கியமாக ஆராயப்பட்டது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆரோக்கியத்துடனும் கலகலப்பாகவும் காணப்படுகின்றார்.

கலந்துரையாடலின் போது எங்களை நோக்கி, ‘இப்போது எனது இதயம் மாத்திரமல்ல, முதுகுத்தண்டும் நன்றாக வலுவாக உள்ளது’ என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இந்த அறுவைச் சிகிச்சையின் பின்னர் அவர் ஒரு 10 ஆண்டுகள் இளமையாக மாறியுள்ளார் என்றே கூற வேண்டும். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் குறித்துப் பேச வேண்டிய தேவை தற்போதைக்கு எழவில்லை.

கட்சியை கிராம மட்டத்தில் மறுசீரமைப்பது, புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பது மற்றும் நாடளாவிய ரீதியில் இளைஞர் முன்னணிகளை மீள ஆரம்பிப்பது போன்ற புதிய வேலைத்திட்டங்கள் அனைத்தையும், நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் ஊடாக விரைவுபடுத்துமாறு எங்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.” – என்றார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…

100 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உ**யிரிழந்த சம்பவம்; அமைச்சர் சந்திரசேகர் உடனடி தலையீடு.!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக…

108 0 0
இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை…

101 0 0
இலங்கை செய்திகள்

மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த சந்தேகநபரை நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.…

105 0 0