உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடமும் ஐ.எம்.எப் பிரதிநிதிகளிடம் முறையிட கூட்டு எதிரணி தீர்மானம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

நாட்டில் தற்போது நிலவி வரும் பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து முறையிடுவதற்குக் கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் விசேட உயர்மட்டக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று கூட்டு எதிரணியின் உறுப்பினர் சுகீஸ்வர பண்டார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குக் கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்துக் கடுமையான நிபந்தனைகளையும் எவ்வித மறுப்புமின்றி ஏற்கும் நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசு இருக்கின்றது.

அரசின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அடித்தட்டு மக்களுக்கு ஏற்படும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து, இந்தச் சந்திப்புகளின் போது மகாநாயக்க தேரர்களுக்கும் ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுக்கும் விரிவாகத் தெளிவுபடுத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

63 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0