உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரவி செனவிரத்ன மற்றும் ஷானியை முதலில் விசாரிக்க வேண்டும்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
35 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளையும், அதன் திட்டமிட்டாளர்களையும் கண்டறிவதற்கு முன்பாக, அக்காலத்தில் உயர் பதவிகளை வகித்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரிடம் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறைத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும், இந்தத் கொடூரமான தாக்குதலை அவர்கள் ஏன் தடுக்கத் தவறினார்கள் என்பது குறித்த விவரங்கள் கண்டறியப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில், தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடமையாற்றிய கீழ்மட்ட உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, உயர் அதிகாரிகள் வரை உள்ள அனைவரிடமும் அது விரிவாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அரசி செயற்பாடுகள் குறித்துப் பார்க்கையில், ஒரு சுயாதீன அதிகாரிகள் குழுவை நியமிப்பதாகவே அவர்கள் முதலில் கூறியிருந்தனர்.

ஆனால், தற்போது கர்தினால் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைக்கு இணங்கவே ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்று நாடாளுமன்றத்தில் அரச தரப்பு அமைச்சர் ஒருவர் கூறி வருகின்றார்.

எனவே, தற்போதைய உயிர்த்த ஞாயிறு விவகார விசாரணையானது ‘வழக்கும் சாமி உடையது, பொருளும் சாமி உடையது’ என்ற பழமொழிக்கு இணங்க, முற்றிலும் பாரபட்சமான ஒரு சூழ்நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

63 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0