உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பாலசந்திரனை என்னிடம் ஒப்படைத்திருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன் – டக்ளஸ் உருக்கம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை தன்னிடம் ஒப்படைத்திருந்தால் அவரைத் தான் நிச்சயமாக உயிருடன் பாதுகாத்திருப்பேன் என்று முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் மௌனித்ததைத் தொடர்ந்து, இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பாலசந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“இறுதிப் போர் முடிவுக்கு வந்த பின்னர், பாலசந்திரன் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருந்தால், அவரை நான் மிகவும் பாதுகாப்பான முறையில் உயிரோடு வைத்திருந்திருப்பேன்.

அவர் பிரபாகரனின் மகன் என்பதற்காக மட்டுமல்ல, ஒரு மனிதநேய அடிப்படையிலேயே நான் இந்த முடிவை எடுத்திருப்பேன். ஏனெனில், போர் மௌனித்த பிறகு அவரைத் தாண்டி எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பலரைத் தான் ஏற்கனவே பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர்,

பாலசந்திரனுக்கும் அத்தகையதொரு பாதுகாப்பைத் தம்மால் வழங்கியிருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

பாலசந்திரனின் மரணம் தொடர்பான விவாதங்கள் இன்னமும் நீடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0