உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய சிறைக் கூடத்தில் இச் சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் குறித்த விசாரணையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்லில் அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண நெறிப்படுத்தலில் இடம்பெறுகின்றது

மேலும் இச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.

இவர் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என்பவர் ஆவார்.

அத்துடன் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலமானது அண்மையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

57 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0