உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தின்கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் நிலவி வந்த காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான காணி நடமாடும் சேவை இன்றைய தினம் (12.06.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நடமாடும் சேவையில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், வடமாகாணக் காணி ஆணையாளர் இ.குருபரன் கிளிநொச்சி மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி)அஜிதா பிரதீபன் ,கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், வடமாகாணக் உதவி காணி ஆணையாளர் விதுசா தினேஸ் , மாகாணக் காணி ஆணையாளர் திணைக்கள அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர்.

இதன்போது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல காணிப்பிணக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன.

மக்களுக்கு தங்களது காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு துரிதமான மற்றும் நேரடி தீர்வுகளை வழங்குவதற்கான இத்தகைய சேவைகள் மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலர்பிரிவு ரீதியாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

57 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0