உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று 8ஆவது வெள்ளிக்கிழமையாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பாதுகாப்புத் தரப்பினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேறாததால் அவை இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.

தமது 651 ஏக்கர் பரப்பளவிலான பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் போராடி வரும் காணி உரிமையாளர்கள், தமக்கு நீதி கிடைக்கும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டங்களை முன்னெடுப்பதென எடுத்த தீர்மானத்துக்கு அமைய இன்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதியுடன் இப்பகுதி மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

இதனை முன்னிட்டு, அன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாகப் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகக் காணி உரிமையாளர்கள் அறிவித்துள்ளதுடன், அதற்குப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் காணி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பருத்தித்துறை நகர சபையின் நகரபிதா வின்சென்ட் டி போல் டக்ளஸ் போல், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0