நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!
கண்டி நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இம்புல்பிட்டிய உச்சியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மரம் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
விபத்தின் பின்னர் அயலவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு நாவலப்பிட்டிய மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் சீரற்ற வானிலை நிலைமைகளில் தயவுசெய்து கவனமாக இருக்க வேண்டும் என நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இன்று இரண்டு மணிக்கு மேல் நீர் ஏந்து பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மேல் கொத்மலை லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர கென்யோன் புரோட்லேன்ட் காசல்ரீ மவுசாக்கலை கொத்மலை ஆகிய நீர் ஏந்து பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.