அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
மணல் அனுமதிக்க படாத பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியாச்சகர் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் 11.06.2026 மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளப்பின் மூலம் இரண்டு டிப்பர் சாரதிகளும் மற்றும் டிப்பர்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவத்தின் இரண்டு டிப்பர் சாரதிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையை பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்ற முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்