உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் – அரச தரப்பு வாதம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே பிணையில் விடுதலை செய்ய முடியும் என அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடகர் சங்கீத்ஷனை பிணையில் விடுவிக்கக் கோரி அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்கரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அச்சமயம் அரசு தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுருப்பவர்களை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துத்தான் பிணை பெற முடியும் என்று வாதாடியமையுடன், அது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

ஆயினும், பிந்திய சட்டத் திருத்தத்துக்கு அமைய விதிவிலக்கான சமயங்களில் மேல் நீதிமன்றத்திலும் அந்தப் பிணை அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று சங்கீத்ஷனின் சட்டத்தரணி கேசவன் சயந்தன் வாதிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கை வரும் 23ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்தப் பிணை கோரும் மனு இன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணைக்கு விண்ணப்பித்த சட்டத்தரணி கேசவன் சயந்தன் பின்வரும் விடயங்களை மன்றுக்குச் சுட்டிக்காட்டினார்.

“தவறான விடயத்துக்காகத் தவறான முறையில் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

அந்தவகையில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு, நீதிப் பிறழ்வு இடம் பெற்றுள்ளது. சங்கீத்ஷனின் மூல வழக்குத் தொடர்பான ‘பி’ அறிக்கையில் உள்ள தவறுகள் காரணமாக அவரின் விளக்கமறியல் முற்றிலும் தவறானது.

அதனால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் நீதிப் பிறழ்வு நீடிக்கின்றது.

இந்த மன்றில் பொலிஸார் தரப்பில் முன்னிலையாக வேண்டியவரும் சட்டமா அதிபரின் பிரதிநிதியுமான அரச சட்டத்தரணி நேரில் பிரசன்னமாகி இருக்கின்ற காரணத்தால், நீதிமன்றக் கட்டளைச் சேவகர் ஊடாக உடனடியாக சட்டமா அதிபருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்தலை அனுப்பி, வழக்கு விசாரணையை நாளையே நடத்த வேண்டும்.” – என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதிக்குத் திகதியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0