உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சங்கிலியன் பூங்காவில் சீனாவின் புத்தகக் கண்காட்சியா? – ஆராய்ந்த பின்னே அனுமதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சீனாவின் வகிபாகம் இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து குறித்த புத்தக கண்காட்சிகான அனுமதி வழங்கலை யாழ். மாநகரசபை இடைநிறுத்தியுள்ளது.

முன்தாக யாழ். மாநகரின் கடந்த நிதிக்குழு கூட்டத்தின் போது சபையின் ஆணையாளரால் இறுதி நேரத்தில் முன்வைக்கப்பட்ட குறித்த புத்தகக் கண்காட்சி தொடர்பிலான முன்மொழிவு, யாழின் கலை கலாசார பண்பாடுகளையும் நல்லூர் ஆலயத்தை பிரதிபலிப்பதாக கொண்டதாகவும், எந்தவொரு பின்னணியும் இல்லாது இருக்குமானால் அதை ஏற்கமுடியும் என குறுத்த குழுவின் உறுப்பினர்கள் கூறிய நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மறுநாள் யாழிலிருந்து வெளியாகும் இலத்திரனியல் ஊடகம் ஒன்றில் குறித்த புத்தக கண்காட்சிக்காக சீனா முனைப்புடன் செயற்படுவதான கருப்பொருளுடன் செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து பூளோக அரசியலில் குறித்த விடயம் சிக்காதிருக்கும் வகையில் இன்றையதினம் சபை அமர்வில், மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவ்விடயம் குறித்து சுட்டிக்காட்டி ஆராயப்பட்ட பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என பிரஸ்தாபித்திருந்தார்.

குறிப்பாக அண்டை நாடானா இந்தியாவுடன் நெருங்கிய கலை, கலாச்சாரம் சார் தொடர்புகளை கொண்டுள்ள யாழ்ப்பாணம் வேறு கலாசாரத் தொடர்புடைய ஒரு புத்தக கண்காட்சியை அனுமதிப்பதில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி குறித்த விடயத்தை ஆராய்ந்த பின்னர் அனுமதி கொடுக்குமாறும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் உறுப்பினர் தர்சானந்த் – யாழ் வர்த்தக கண்காட்சி இந்தியாவின் பின்னணியில் நடைபெறுவதால் அங்கு சீனாவுக்கு இடம் கிடைக்காமையால் யாழில் ஏதாவது ஓரிடத்தில் தானும் புத்தக கண்காட்சியை நடத்த நினைக்கும் சீனா சங்கிலியன் பூங்காவில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் மாநகரசபையால் ஏலத்தில் விடப்படும் ஓர் இடத்தை பெற்று நடத்த முயற்சிக்கின்றது என்ற சாரப்பட கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆணையாளர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க நினைப்பதாகவும், கூட்டங்களிலும் சபையின் நடவடிக்கைகளிலும் முதல்வருக்கே அதிகாரம் உள்ளது. இது புதிதாக வந்துள்ள ஆணையாளருக்கு சில வேளைகளில் தெரியாதிருக்கலாம். எனவே இந்த விதிமுறைக்கு அவரை செயற்படுமாறு அறிவுறுத்துமாறு முதல்வரால் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் குறித்த புத்தக கண்காட்சிக்கான அனுமதி முழுமையாக ஆராய்த பின்னரே வழங்கப்படும் என்றும் அதுவரை எந்த நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படாதெனவும் தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0