விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு.!
வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம வீதியின் வீரவில பகுதியில் நேற்று (10) புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வீரவில பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.
அம்பாந்தோட்டை நோக்கி பயணித்த வேன் ஒன்று, அதேதிசையில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி உடனடியாக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.