உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து; சாரதி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
17 பார்வைகள்

களுத்துறை, அளுத்கம – டிப்போ வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன், முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், முச்சக்கரவண்டி தர்கா நகரிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்துள்ளதோடு, ரயில் கடவையைச் சாரதி கவனக்குறைவாக கடக்க முயன்றபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த போது முச்சக்கரவண்டியில் சாரதி மட்டுமே பயணித்துள்ளார்.

உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0