உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சமுர்த்தி திணைக்களத்தை துண்டாட மாட்டோம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கையின் நுண்நிதித்துறையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் பாரிய சேவையாற்றி வருவதால், அதனை எந்தவகையிலும் விற்பனை செய்வதற்கோ அல்லது துண்டாடுவதற்கோ எவ்வித ஆயத்தமும் இல்லை என்று கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்தார்.

அனைத்து இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 29 ஆவது தேசிய மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்ல, சுஹுருபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசு மிகக் குறுகிய காலத்துக்குள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களின் பல தசாப்த கால பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவற்றில் ஓய்வூதியப் பிரச்சினை, சம்பள மேலதிகக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை, சம்பளக் குறியீடு தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தி அவற்றுக்குத் தீர்வு காண்பது போன்றன பிரதானமானவை ஆகும்.

கடந்த அரசாங்கங்களின் காலத்தைப் போன்று சமுர்த்தி ஊழியர்களை இனிமேலும் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. அரச ஊழியருக்குரிய கௌரவம் கிடைக்கும் வகையில் அவர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்குத் தேவையான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திணைக்களத்தை முடக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுவாகவும் பயனுள்ளதாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், சமுர்த்தி ஊழியர்களின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு நடைமுறைகளை இவ்வருடத்துக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.” – என்றார்.

இந்த நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல, திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், அனைத்து இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உட்படப் பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0