கடற்றொழில் அமைச்சின் அறிவித்தலை ஏற்றுக் கொள்ள முடியாது – வடமாகாண மீனவ சங்க பிரதிநிதி தெரிவிப்பு!
மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடமாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வடமராட்சி கிழக்கில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போது வீசுகின்ற காற்று குறைந்தளவு வேகம் கொண்டது.இது பரவகாலத்திற்கு உரியது.
இதைவிட பல மடங்கு வேகமாக காற்று வீசுகின்ற காலத்தில் கூட நாம் கடற்றொழிலுக்கு சென்று வந்தோம்.
இவ்வாறு கடற்றொழிலிற்க்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகின்றமையால் மீனவரகளாகிய எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் படுகிறது.
இவ்வாறாதொரு வறுமை நிலையில்தான் கடற்றொழிலிற்கு சென்று 4 மீனவர்கள் காணாமல்போயுள்ளனர்.
காணாமல் போன மீனவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.
அடிக்கடி காலநிலை மாற்றத்தால் தாம் பாதிக்கபடுவதனால் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்