உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஜனாதிபதியின் பொய் வாக்குறுதி; தலைவிரித்தாடும் இலஞ்சம்; மீனவர்கள் அவலக்குரல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கரைவலைத் தொழிலுக்காக, உழவு இயந்திரத்தில் (Tractor) பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களை (Winch Machines) பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினைக்கு, இரண்டு மாதங்களுக்குள் தீர்வு தருவதாக ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார். அதுவரை இந்த முறையிலான மீன்பிடித்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் கோரியிருந்தார்.

ஆனால், அவர் கூறி நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை. இதனால் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களாவன:-

  1. முடங்கிய முதலீடுகளும் களவான தொழிலும்:
    பெருமளவு பணத்தை முதலீடு செய்து இந்த வின்ச் இயந்திரங்களை வாங்கி, தொழிலைத் தொடங்கிய பல மீனவர்கள் இன்று வேறு வழியின்றி தொழிலைக் கைவிட்டு முடங்கிக் கிடக்கின்றனர். வேறு சிலர், வாழ்வாதாரத்திற்காக திருட்டுத்தனமாக இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  2. பாரபட்சமான பொலிஸ் நடவடிக்கைகள்:
    சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் இதில் கடும் பாரபட்சம் காட்டுகின்றனர். கொக்கிளாய் பகுதியில் உள்ள சிங்கள வாடிகளின் பக்கம் பொலிஸார் எட்டிப்பார்ப்பதே இல்லை. ஆனால், முள்ளிவாய்க்கால், அளம்பில் போன்ற தமிழ் மீனவர்கள் வாழும் கடற்கரைகளில் மட்டுமே பொலிஸார் தீவிரமாகத் தங்களின் அதிகாரத்தைக் காட்டுகின்றனர்.
  3. நீதிமன்றத் தண்டமும் இலஞ்ச ஊழலும்:
    இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தும் மீனவர்களைப் பிடிக்கும் பொலிஸார், சிலரை நீதிமன்றத்தில் முற்படுத்தி சிறிய தொகையை அபராதமாக விதிக்கச் செய்கின்றனர். ஆனால், பல சந்தர்ப்பங்களில் மீனவர்களிடம் பெரும் தொகையை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அவர்களை அப்படியே விட்டுவிடுகின்றனர். அதுமட்டுமன்றி, விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொலிஸார், மீனவர்களிடம் இலஞ்சமாகப் பிடுங்கிய மீன்களைத் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லும் அவலமும் நடக்கிறது.

“ஊழலை ஒழிப்போம்” என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களே, இன்று அடிமட்ட அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளனர்.

  1. கடற்றொழில் அமைச்சரின் பொய் வாக்குறுதிகள்:
    வெளிநாடுகளுக்குத் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொண்டு, கடற்றொழிலை நவீனமயமாக்குவது பற்றிப் பேசும் கடற்றொழில் அமைச்சர், முதலில் நாட்டுக்குள் நடக்கும் இந்த அநீதிகளையும் ஓட்டைகளையும் அடைப்பாரா?

கடந்த தை மாதத்தில் இருந்து கடலில் நடக்கும் அனைத்து சட்டவிரோத மீன்பிடி முறைகளும் முற்றாக நிறுத்தப்படும் என்று இதே அமைச்சர் பகிரங்கமாகக் கூறினாரே? இன்றுவரை அதை நிறுத்துவதற்கு அவரால் முடிந்ததா? இல்லை!

அன்பான கடற்றொழிலாள தோழர்களே, பொதுமக்களே. அரசாங்கத்தின் இந்த பாராமுகத்தாலும், அதிகாரிகளின் அராஜகத்தாலும் உங்கள் பகுதி கடற்கரைகளின் தற்போதைய நிலைமை எவ்வாறு உள்ளது? உங்களுடைய கருத்துக்களையும் பதிவிடுங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0