உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த குழுவில் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார். இதன்போது அவ் இடத்திற்கு வரும் கணவனும் அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே பாணியில் ஒரு சம்பவம் இடம்பெற்ற நிலையில் அது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த குழுவினரை சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0