மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மே மாதம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் புது டெல்லிக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (11) தேசிய தலைநகரில் நடைபெறும் நிதி ஆயோக்கின் 11 ஆவது ஆளும் குழுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
டெல்லியில் இருக்கும்போது தமிழக முதல்வர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தப் பயணத்தின் போது விஜய், தனது கூட்டணிக் கட்சிகளைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், அவரது முந்தைய பயணம் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடனான சந்திப்புகளுடன் மட்டுமே நின்றுவிட்டது.
தனது முதல் பயணத்தின்போது அவரால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை.
பயணத்தை முடித்துக் கொண்டு தமிழக விஜய் எதிர்கூரும் வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.










