உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் விசேட தடயவியல் அகழ்வாராய்ச்சி நேற்று நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மிகத் தீவிரமாக இடம்பெற்ற போதே இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் போது, மிகக் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டிருந்த புதிதாக ஒரு சிசுவினுடைய எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நிபுணர்களால் தரைக்கடியில் அடையாளம் காணப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் சர்வதேச தரம் வாய்ந்த தடயவியல் விதிகளுக்கமைய துல்லியமாகச் சுத்தம் செய்யப்பட்டு, பிரத்தியேகமாக இலக்கமிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அங்கு ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த சிறுவர்களின் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாகப் பொதியிடப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு ஆகிய இரு வேறு பகுதிகளில் இருந்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுகளின் மூலம் மொத்தமாக 327 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில், சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் கூட்டுப் பரிசோதனைகளுக்காக இதுவரை 311 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தரைக்கடியில் இருந்து முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றக் கட்டுக்காவலில் 112ஆவது சான்றுப்பொருள்
நேற்று தோண்டப்பட்ட விசேட அகழ்வுக் குழி ஒன்றில், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் மிக நெருக்கமாகக் காணப்பட்ட பழைய நாணயக் குற்றி ஒன்று தடயவியல் அதிகாரிகளால் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நாணயக் குற்றியை இந்தப் புதைகுழியின் காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான மிக முக்கிய சான்றாகக் கருதி, 112 ஆவது சான்றுப்பொருளாக அதிகாரிகள் இலக்கமிட்டுள்ளனர். அத்துடன், மேலதிக பரிசோதனைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அது தற்போது நீதிமன்றக் கட்டுக்காவலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0