உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக விரைவில் முழுமையாக நீக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அரசின் இந்த உத்தியோகபூர்வ கொள்கை முடிவை நாட்டுக்கு வெளிப்படுத்தினார்.

அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில்,

“பல தசாப்த காலமாக விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த நாட்டிலிருந்து முற்றாக நீக்குவதற்கான அனைத்து முதற்கட்ட மற்றும் சட்ட ரீதியான பூர்வாங்க நடவடிக்கைகள் எமது அமைச்சின் மூலமாக ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன.

மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தின் ஊடாக முற்றாக ஒழிக்கப்பட்டு, வரலாற்றில் இருந்து நீக்கப்படும். கடந்த காலங்களைப் போல, இவ்வாறான அடக்குமுறை மற்றும் கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தித் தற்காலிகமாக ஆட்சி நடத்த வேண்டிய எந்தவொரு தேவையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு இல்லை என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம்.” – என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைச் சான்றாக முன்வைத்துத் தொடர்ந்து பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,

“நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எமக்கு வழங்கியுள்ள பலமிக்கதும், தூய்மையானதுமான மக்கள் ஆணையே எமது அரசின் மிகப்பெரிய பலமாகும். எனவே, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் விடயங்களை உள்வாங்கி, ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் வகையிலேயே எமது அடுத்தகட்ட சட்டப் சீர்திருத்த நகர்வுகள் அமையும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0