உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது.

அரசியல் இலாபங்களுக்காகப் போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் விசாரணைகள் அதன் போக்கில் நேர்மையாக முன்னோக்கி நகரும்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

    சி.ஐ.டி. விசாரணைகளுக்குத் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

    “குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய சுயாதீன விசாரணைகளுக்கு எவரேனும் இடையூறு விளைவிக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்துகொண்டாலோ, அல்லது அது குறித்து உண்மைக்குப் புறம்பான போலித் தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட்டாலோ, அது குறித்துத் தகுந்த சான்றுகளுடன் நீதிமன்றத்துக்கு உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    அதன் பின்னர், சட்டத்தை மீறிய அத்தகைய நபர்களுக்கு எதிராக நீதிமன்றமே தகுந்த உத்தியோகபூர்வ தீர்மானங்களை எடுக்கும்.

    நாட்டில் ஏதேனும் முக்கிய ஊழல் அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடையும் போது, திட்டமிட்ட சில போராட்டங்கள் மூலம் பொதுமக்களின் அவதானத்தை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு தவறான கலாசாரம் கடந்த காலங்களில் வளர்ந்து வந்துள்ளது.

    இத்தகைய திசைதிருப்பல் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் அனைத்தும் மிக விரைவாக இறுதி இலக்கை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” – என்றார்.

    அரசியல் தூண்டுதலால் நடத்தப்படும் தற்காலிகப் போராட்டங்கள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சாடியதாவது:-

    “வெறும் 12 அல்லது 18 பேர் கொண்ட சிறிய குழுக்களை வீதிகளில் அமர்த்தி, கூச்சலிட்டுப் போராடுவதனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டபூர்வ விசாரணைகளுக்கு எந்தவொரு பாதிப்போ அல்லது தடைகளோ எற்படப் போவதில்லை.

    எமது அரசின் கீழ் எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, சட்டத்தின்படி விசாரணைகள் சரியான முறையில் நேர்மையாக முன்னோக்கி நகரும் என்பதை நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் உறுதி கூறுகின்றோம்.” – என்றார்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

    வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

    65 0 0
    இலங்கை செய்திகள்

    எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

    எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

    78 0 0
    இலங்கை செய்திகள்

    அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

    தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

    29 0 0
    இலங்கை செய்திகள்

    மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

    அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

    50 0 0